திமுக

தமிழ் உணர்வாளர்களுக்கு அதிமுக எதிரி என்றால் திமுக துரோகி. 2011 ஆம் ஆண்டு நடந்தது ஆட்சி மாற்றம் மட்டுமல்ல. உண்மையில் அது் திமுகவிற்கான தண்டனை.

இலங்கையில் கடைசி யுத்தம் நடந்து கொண்டிருந்த பொழுது கருணாநிதி தன் படை சூழ டெல்லிக்கு சென்று மந்திரி சபையில் என்ன இலாகா வேண்டும் என பேரம் பேசிக்கொண்டுயிருந்தார். உண்ணாவிரதம் என்ற பெயரில் நாடகம் நடத்தி போர் நின்று விட்டதாக அறிவித்து ஒளிந்திருந்த மக்களை வெளிவர செய்து கூண்டோடு அழித்தார்

இவ்வளவு நடக்கும் போதெல்லாம் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகவில்லை. 2ஜி வழக்கில் காங்கிரஸ் விட்டுக்கொடுக்காமல் நடந்து கொண்டதால் இலங்கை தமிழர்க்ளை பகடையாக்கி கூட்டணியில் இருந்து வெளிவந்தது.

ஜனநாயக தேர்தலில் அரசியலில் ஆளும் கட்சியை விட எதிர்கட்சிக்கே பொறுப்பு அதிகம். தேமுதிக அதிமுக ஆதரவில் எதிர்கட்சி ஆனது மட்டமல்ல, அனுபவம் வாய்ந்த கட்சியும் அல்ல அது. நியாயமாக திமுகவுக்கு தான் எதிர்கட்சி பொறுப்பு, ஆனால் நான்கு வருடங்களாக ஓய்வு எடுத்துவிட்டு தேர்தல் நெருங்கும் கடைசி கட்டத்தில் நமக்கு நாமமே நாடகம் நடத்திக்கொண்டிருக்கிறது திமுக.

சிறு கட்சிகள் எதுவும் திமுகவுடன் கூட்டணி சேர மாட்டோம் என விலகி நிற்பது. இதுவரைம அவர்கள் ஆட்சி புரிந்த லட்சணதை காட்டுகிறது. அண்ணா காலம் வரை அரசியல் என்பது சேவையாக கருதப்பட்டது. கருணாநிதி காலத்தில் அரசியல் தொழிலாக மாறியது. வார்டு கவுன்சிலர் கூட டவேரா காரில் வலம் வந்த காட்சி திமுக ஆட்சியில் நடந்தது.



கக்கன் கட்டிகாத்த காவல்துறை வட்ட செயலாளர், மாவாட்ட வந்த செயலாளர் பேச்சை கேட்டு நடக்கும் அவல நிலைக்கு வந்தது. 12000 ரூபாய் சம்பளம் வரும் அரசு வேலை பெற குறைத்தபட்சம் ரெண்டு லட்சம் லஞ்சம். திமுக ஆட்சியில் ஆரம்பித்த இந்த அவலம் தான் இப்போதும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றது.

அய்யய்யோ தனியா இருக்கேன், யாராவது துணைக்கு வாங்களேன்னு கதறும் அளவுக்கு பிற கட்சிகள் திமுகவை அநாதை ஆக்கிவிட்டன. இதே திமுக தான் பிற கட்சிகளை அரசியல் அநாதை என விமர்சனம் செய்தது. திமுக திருட்டு கும்பல் என மேடை தோறும் கிழித்து கொண்டிருக்கும் தேமுதிகவை கூட்டணிக்கு அழைத்தது திமுக. வெட்கம், மானம், சூடு, சொரணை என்பார்களே அப்படின்னா என்னான்னு கேட்பது தான் அரசியல் போல

அடிமைகள், செக்கு மாடுகள் மாதிரி. கண் மறைக்கபட்ட குதிரை மாதிரி. நாட்டில் என்ன நடக்குதுன்னே தெரியாம திமுக தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் என்பார்கள். கூட்டணி சேராத சகல கட்சிகளையும் சாதி கட்சி, ஒட்டுண்ணி என விமர்சிப்பார்கள். இன்று மதவாத கட்சியான பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவல நிலையில் உள்ளார்கள்.

திமுகவுக்கு இது வாழ்வா சாவா தேர்தல். அழகிரி, கனிமொழி போல் ஸ்டாலின் வாரிசு உரிமையை பயன்படுத்தி அரசியலுக்கு வரவில்லை ஆனாலும் ஸ்டாலினுக்கு பதவியை கொடுத்துவிட்டால் கனிமொழி கோவித்துக்கொள்வார், கனிமொழிக்கு கொடுத்தால் அழகிரி கோவித்துக்கொள்வார் என குடும்ப பிரச்சனைகளை பார்க்கவே திமுகவுக்கு நேரம் சரியா இருக்கு. இவர்கள் ஆட்சிக்கு வந்தால் மட்டும் மக்கள் பிரச்சனைகளை பார்ப்பார்களா என்ன?

!

Blog Widget by LinkWithin